கொழும்பில் காணாமல் போன தமிழ் இளம் பெண் தொடர்பில் பொதுமக்களின் உதவியை போலீசார் கோரியுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த மாணிக்கராஜா மொனிகா என்ற 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இது குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் 011 – 2421414 என்ற இலக்கத்துக்கு அழைத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது பொலிஸ் நிலைய பொது மக்கள் தொடர்புகள் பிரிவின் 011 – 2436161 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் மற்றோர் இளம் சிங்கள யுவதி ஒருவரும் காணாமற் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.