கிராம்பை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

0
109

அலமாரிகள் போன்றவற்றில் பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்புகளை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும்.கிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது.

தினமும் காலையில் மூன்று முதல் நான்கு கிராம்பு கடித்து சாப்பிட வேண்டும். ஏதாவது ஒரு வேளை சாப்பாட்டில் கிராம்பை கலந்து கொள்வது அவசியம். அவ்வாறு உண்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தும். வயிறில் எந்தவித கோளாறும் வராதபடி தடுக்க கிராம்பு உதவுகிறது.

நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

கிராம்பை உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது.

தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here