பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் சிவில் சமூகத்திற்கு சிறந்த சேவையை முன்னெடுப்பதே கிராமத்துக்கு பொலிஸ் நிலையம் அமைத்தலின் நோக்கம் என அட்டன் பிராந்திய பொலிஸ் அதிகாரி ரவீந்திர அம்பபேபிட்டிய தெரிவித்தார்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட காசல்ரியில் கிராமத்திற்கு பொலிஸ் எனும் தொனிப்பொருளில் தற்காளிக காலவரன் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய நாடளவிய ரீதியில் ஆரம்பித்து வைத்துள்ள கிராமத்து பொலிஸ் காவலரன் அமைத்தலின் ஒரு கட்டமாக காசல்ரியில் 20.05.2018 ஆரம்பிக்கப்ட்ட தற்காளிக காவலரண் திறப்பு விழா நிகழ்வாது அட்டன் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மொஹமட் ஜமீல் தலைமையில் இடம்பெற்ற. இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
பொலிஸார் பொலிஸ் நிலையங்களினுள்ளே இருப்பதை விடுத்து பொது மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும் என்பதே பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவாகும் அவரின் ஆலோசணைக்கமைய கிராமம் தோரும் காவலரண்களை அமைத்து வருகின்றோம் இவ்வாறு அமைக்கப்படும் காவலரண்களின் ஒரு தலைமை பொலிஸ் அதிகாரி உட்பட 10 பொலிஸ் அதிகாரிகள் இரவு பகல் என கடமையாற்றவுள்ளனர் அவர்களினூடாக பொலிஸ் பதிவுகள் முறைப்பாடுகள். நடமாடும் சேவைகள் போன்ற விடயங்களை உங்களுக்கு உங்க ஊரில் வந்து செய்து கொடுக்க பொலிஸாராகிய நாங்கள் தயாரிகிவிட்டோம் எமது இந்த செயற்பாட்டிற்கு பிரதேச மக்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்றார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்