மலையகத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் தோட்டபுற மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சிக்காகவே கட்டப்பட்டு இயங்கிவரும் பாடசாலைகளாகும்.
பிரித்தானியர் காலத்தில தேயிலை பயிர்களை தோட்டத்து பிள்ளைகள் நாசமாக்கிவிடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட பிள்ளைமடுவங்களே பிற்காலத்தில் சிறிது சிறிதாக தோட்ட பாடசாலையானது.
ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் மதம்மாறியவர்களுக்குமே முறையான கல்வி போதிக்கப்பட்டது மற்றையவர்களுக்கு கண் துடைப்புதான்.
இலங்கையின் கல்வி முறைமையானது காலனித்துவ வாதிகளின் நலனுக்கு அமைவாகவே கொண்டு செல்லப்பட்டது.
அவர்கள் கல்வியை பின்வரும் தேவைக்காகவே பயன்படுத்தினர்.
சமயம் பரப்பும் ஒரு கருவியாக கல்வியை பயன்படுத்தல்,
கல்வி வழங்கும் பொறுப்பை சமய நிறுவனங்களுக்கும்,தனியாருக்கும் கொடுத்தல்,ஆனால் கட்டுப்பாடு அரசுக்கு கீழேயே இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருத்தல்,
கல்வியை ஆங்கிலத்திலேயே வழங்கவேண்டும் என்பதில் குறியாக இருத்தல்,
கல்வி வழங்குவதில் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு வாய்ப்பளித்தல்
உயர்கல்வியை உரிய நேரத்தில் கொடுப்பதில் தாமதம் காட்டல்.
இம்முறைமையால் சமூக ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டது மட்டுமல்ல அவை இன்னமும் முற்று முழுதாக நீக்கப்பட முடியாமல் இருக்கிறது.
அன்மையில் நானுஓய பகுதியில் ஓர் வித்தியாலயத்தில் சரஸ்வதி பூசை தினத்தன்று ஓர் மாணவன் பேய்பிடித்து ஆடியதாகவும்,அப்போது பிளாஸ்ட்டிக்கினாலான ஜெபமாலை ஒன்றை கொண்டு சென்று அணிவித்ததும் பேய் ஓடிவிட்டதாகம் சம்பந்த பட்டவர்கள் கூறிக்கொண்டதோடு இப்போது அம்மாணவர் ஓர் ஆசிரியர் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறப்படுகின்றது. (எமக்கு கிடைத்த தகவல் தவறென்றால் மறுத்துரைக்கலாம்).
இப்படியாக முழு வீச்சில் மதமாற்றசெயற்பாடுகளும் நடைப்பெறுகின்றன.ரோமன் கத்தோலிக்கம் அல்லாத சபைகள் இதுவிடயத்தில் மிக தீவிரமாக செயற்படுகின்றன நோய்கள் பெயரால்,பேய்கள்பெயரால்,சாதிகள்பெயரால்,காதலின் பெயரால் என எப்படிஎப்படி எல்லாம் மதமாற்றத்தில் ஈடுபடமுடியுமோ அப்படி அப்படி எல்லாம் மதமாற்றம் செய்கின்றனர். தேவனின் பெயரால் வயிறு வளர்க்கும் ஓர் கூட்டம் சந்திக்கு சந்தி புற்றீசல் போல் பெறுகி இக்கைங்கரியத்தில் ஈடுபடுகின்றனர்.
மதம்மாறினாலும் சலுகை மதம் மாற்றினாலும் சலுகை என இக்கூட்டம் அலைந்து திரிகிறது.அப்போதுதான் இம்மாதம் இத்தனைபேரை மதமாற்றம் செய்துள்ளோம் என அவர்களுக்கு நிதிவழங்குவோருக்கு காட்டி நிதிநிலைமைகளை தக்க வைத்துக்கொள்ளவோ,பெருக்கிகொள்ளவோ முடியும். ரோமன் கத்தோலிக்க சபைகளும் ஒன்றும் சளைத்தவைகள் அல்ல.அவர்கள் பழம்பெறுமை பேசி ,மற்ற மதத்தவர்களை கெடுத்து வாழ்வதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.இம்மதங்களை பின்பற்றும் எல்லோரையும் அப்படி சொல்வதற்கில்லை மிக அருமையான மனிதர்களும் இல்லாமலில்லை.
இது இப்படியிருக்க இப்போது கிறிஸ்த்தவ பாடசாலைகளில் கிறிஸ்த்தவர்கள் தான் அதிபர்களாக இருக்க வேண்டும் என ஒரு கூட்டம் குரல் எழுப்பிக்கொண்டு திரிகிறது.
ஹட்டன் பொஸ்க்கோ,கெப்ரியல், நுவரெலியா சென்சேவியர்,குட்சபர்ட் ,மெதொடிஸ்ட்,ஹொலிடிரினிடி போன்ற பாடசாலைகளில் அதிபர்கள் கிறிஸ்த்தவர்களாக இருக்க வேண்டும் என தேவாலயங்களின் பெயரால் சிலர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.’
குறிப்பாக நுவரெலியா சென்சேவியர் ஆலயமும்,அதன்செயற்பாட்டாளர்களும்,சட்டபூர்வமற்ற சேவியர் பழையமாணவர்கள் சங்கம் என்ற பெயரில் செயற்படும் பெஞ்சமின்,நவாஸ்,போல்பெரேரா,மைக்கல் போன்றவர்கள் மிக பெரிதாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இதில் பெஞ்சமின் சென்சேவியர் பாடசாலையில் பெண்ணாசிரியை ஒருவருடன் தகாத முறையில் நடக்க முற்பட்டு தண்டிக்கப்பட்டவர்,இப்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பவர்,ஏனையோரும் நிரந்தரமான தொழிலற்றவர்கள் இவர்களால் பழைய மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் பல லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்று வயிறு வளர்க்கப்பட்டு வருகிறது.
இத்தகைய திருட்டு கூட்டத்திற்கு முன்னாள் அதிபர் உசைன் இடமளிக்க வில்லை என்பதாலும்,அவர் தமிழர்(மதம்மாறியவர்)என்பதாலும் அவருக்கு பல தொல்லைகள் கொடுத்தனர்,பின்னர் வந்த அதிபர் ஜெபபாலன் ஆரம்பத்தில் இவர்கள் வலையில் விழுந்த போதிலும் பின்னர் சுதாரித்துக்கொண்டார்.இருந்த போதிலும் இவரின் மீது சுமத்தபட்ட குற்றசாட்டுகளுக்கு பலதகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதில் இவர்களின் பங்களிப்பு மிக பெரிது.இருந்த போதும் பெஞ்சமினுடனானதொடர்பு இன்னமும் இவருக்கு உண்டு.
இவருக்கு பிறகு பலியாடுபோல மாலை மரியாதைகளோடு பழையமாணவர்களால் அழைத்து வந்த ஜோன்நிக்கலஸ் இவர்களினதும் தேவாலய பங்கு தந்தையினதும் கைபாவையாகி ஆறு மாதகாலத்தில் பாடசாலையை முற்றுமுழுதாக விற்று தானும் வயிறுவளர்த்து பழையமாணவர்கள் சங்கம் என்ற பெயரில் வயிறு வளர்க்கும் கூட்டத்தையும் உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.
எம்முடைய கேள்வி யாதெனில் கிறிஸ்த்தவ பாடசாலையில் கிறிஸ்த்தவர்கள் தான் அதிபர்களாக இருக்கவேண்டும் எனில் தாராளமாக இருக்கட்டும்.பின்னர் இந்து பெயர்களில் இயங்கும் தமிழ் பாட்சாலைகளில் ஏன் அதிபர்களாக கிறிஸ்த்தவர்கள் இருக்கிறீர்கள்?
எல்லோரும் கிறிஸ்த்தவபாடசாலைகளுக்கு செல்லுங்களேன்.சேவியரை விற்ற நிக்கலஸ் இப்போது கொட்டகலை கேம்பிரிட்ஜில் அதிபராக இருக்கிறார் 99% இந்து மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் இவர் எப்படி அதிபராக இருக்கமுடியும்?நுவரெலியா கல்வி வலயத்தில் 99% இந்து மாணவர்களே கற்கின்றனர்,எப்படி மேலதிக வலய கல்விபணிப்பாளராக் ஒரு கிறிஸ்த்தவர் இருக்க முடியும்?
நாம் மதவாதத்தை தூண்ட வில்லை.இணக்க போக்கிலேயே பெரும்பாலான மலையக தமிழர்கள் செல்கிறார்கள் குறுகிய மதவாதம் பேசும் சில வீணர்களால் நடு நிலை கிறிஸ்த்தவர்களும் சிந்திக்க மறந்துவிடகூடாது என்றே ஆதங்கப்படுகின்றோம்.
மலைக்கள்ளன்