கிளப் வசந்த் கொலையில் மற்றொரு சந்தேக நபர் சிக்கினார்

0
30

அதுருகிரியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அதுருகிரிய பொலிஸ் பிரிவில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்று 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, கொலைகளுக்கு ஆதரவளித்த சந்தேகநபர் நேற்று (06) தெற்கு அதிவேக வீதியின் சேவா சதுக்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டு அத்துரிகிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தர்கா நகரை சேர்ந்த 36 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here