கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டகிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியின் பல்வைத்திய பிரிவும் சிற்றுண்டிச்சாலையும் நேற்று முன்தினம் 15.06.2018 திறந்து வைக்கப்பட்டது.
கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனை திறந்து வைத்தார்.நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வட மாகாண சபையின் உறுப்பினர்களான குருகுலராஜா பசுபதிபிள்ளை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
எஸ் .சதீஸ்