கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி

0
91

கிழக்கு ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன்,படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான்,டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

இப்ப போட்டியை பார்ப்பதற்கான ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100000 ரூபாயும்,இரண்டாம் பரிசாக 50000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here