கிழங்கன் வைத்தியசாலையில் நடக்கும் அட்டூழியம்? மலையகத்தில் இருந்து ” கருடனுக்கு வந்த மடல்!

0
113

இந்திய நிதி பங்களிப்போடு பெரும் ஆரவாரத்துடன் ஏட்டிக்கு போட்டியான சில்லறை அரசியல் நகர்வுகளோடு பாரத பிரதமரின் தலைமையில் திறக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்திய சாலையில் நடப்பது என்ன?

தோட்ட புற மக்களின் வைத்திய வசதிகளை மேம்படுத்தவென்று அமைக்கப்பட்டதாக சொல்லப்படும் இவ்வைத்திய சாலையில் தமிழ் நோயாளர்கள் புறக்கணிக்கப்படுவது எத்தனை பேருக்கு தெரியும்?

பாதுகாப்பு கடமைகளுக்கு என இங்கு அமைக்கப்பட்டிருக்கும் பொலிஸாரின் அடாவடித்தனம் எல்லைமீறி போவதாக அறியகிடைத்துள்ளது வைதியசாலைக்கு வரும் பல்வேறு பொருட்கள் அவர்களின் ஊடாகதான் வெளியில் கடத்தப்படுகின்றது இங்கு வேலை செய்யும் சிற்றூழியர்களிடமும்,தாதிமார்களிடமும் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பில் எவராவதுபிரச்சினை பட்டால் இப்பொலிஸ் படை பாதாள கோஷ்ட்டி போல் செயற்பட்டு அடி உதையில் இறங்கி வைத்திய சாலை தரப்பிற்கு அடியாள் வேலை பார்க்கிறது.

அண்மையில் ஒரு தமிழ் நோயாளி தாதி ஒருவருடன் முறண்பட்டதால் அத்தாதி, நோயாளியை தாக்கியுள்ளார் அதனால் நோயாளியின் பல் ஒன்று உடைந்துள்ளது.பாதிக்கப்பட்ட நோயாளி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.உடனே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.நோயாளியை பல் மருத்துவரிடம் அழைத்து சென்று அவருக்கு நீண்ட நாள் பல் வருத்தம் இருந்த தாகவும் அதுவேஉடைந்து விட்டதாகவும் எழுதி மருந்து கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அதற்கெல்லாம் மேலாக 9ஆம் 10ஆம் இலக்க வார்ட்டில் இன துவேஷம் மிக சிறப்பாக கோலோச்சுகிறது,இது தான் மகபேற்று வார்ட் இங்கு அமரா,அத்தநாயக்க,பிரிய தர்ஷினி என மனித வடிவிலான பேய்கள் தாதிகள் என்ற போர்வையில் உலாவருகின்றன நமது மலையக பெண்கள் மகபேற்றுக்காக வரும் போது சுத்தமாக வருவதில்லை,அப்படிவருகிறார்கள்,இப்படி வருகிறார்கள் என தேவையற்ற விதததில் கதைப்பது,குறிப்பாக ஆம்பிளையோடு சேர்ந்திருக்கும் போது அப்படி யிருந்த இப்படியிருந்த இங்க வரும் போது ஒழுங்கா வரமுடியாதோ என்ற ரீதியில் பெண்கள் கூசிப்போகும் அளவிற்கு இவர்களின் பேச்சு இருக்கிறது.

வார்த்தைகளால் அடிப்பது மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் இவர்கள் நமது தாய்களை தாக்கு கிறார்களாம். அமைதியாக வைத்திருக்க வேண்டிய இந்த வார்ட் எப்போதும் அல்லோல கல்லோல பட்டுத்தான் இருக்குமாம். இரவு கடமையில் இருப்பவர்கள் இரவு முழுதும் தொலைகாட்சியில் லயித்து போயிருப்பதும் தொலைபேசியில் ஒன்றிப்போயிருப்பதும் தான் வேலை.இந்த காரணத்தினால் அவதிப்படும் நமது பெண்களில் பலர் மிகுந்த சிரமத்திற்கு உட்பட்டுள்ளது மட்டுமல்லாமல் சில சிசுக்கள் இறந்தும் போயுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் இங்கு சிற்றூழியராக வேலைசெய்யும் விஸ்வநாதன் எனப்வரின் தொல்லை மிக கேவலமாக இருக்கிறதாம்.ஒரு அமைச்சரின் வேண்டபட்ட ஆள் எனக்கூறிக்கொண்டு பலரிடம் பணம்வாங்கி ஏப்பம் விடுவது இவரின் வாடிக்கையாம்,பெண்களையும் இவரது வலைக்குள் சிக்க வைத்துள்ளார்.மாகாண வைத்திய இயக்குநருக்கு ஒரு மாகாணசபை உறுப்பினர் ஊடாக வீட்டு வேலைக்கு ஆள் பிடித்துக்கொடுத்துள்ளார் இதனை சாட்டாக வைத்துக்கொண்டு மாகாண இயக்குனர் தனக்கு மிகுந்த வேண்டியவர் எனவும் தான் சொன்னால் எதனையும் செய்வார் என பலரை நம்பவைத்து தனது அரங்கேற்றங்களை நடாத்தி வருகிறார்.
நான் முன்னால் அமர்வதா பின்னால் அமர்வதா,யார் மோடியிடம் பேரை போடுவது எத்தனை பஸ்ஸில் எவ்வளவு ஆட்களை கொண்டு வருவது என போட்டி போடு மக்களுக்கு எள்ளவும் பிரயோசனமற்ற அர்சியல் நடத்தும் மலையக அரசியல் வாதிகளே இப்பிரச்சினைகளுக்கு என்ன பதிலை சொல்ல போகிறீர்கள்?

மலைக்கள்ளன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here