இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் தொலைநோக்கு சிந்தனைக்கேற்ப கீர்த்திமிக்க மலையகத்தை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும் என்பதிலும், நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸிக்கு மேலும் வலு சேர்த்திருப்பதாக அதன் பொதுச் செயலாளரும், சட்டதரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் பெருந்தோட்ட சேவையாளர்களின் வாழ்வில் ஏழுச்சியை மட்டுமல்லாது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு காத்திரமான தீர்வை ஏற்படுத்த முடியும். பிரதானமாக பெருந்தோட்ட சேவையாளர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர் என்ற நிலைமை மேலோங்கி தேசிய மட்டத்தில் அவர்களுக்கோர் அஸ்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
பெருந்தோட்ட சேவையாளர்களின் எதிர்பார்ப்புக்களை வீணடிக்க முனைபவர்களின் ஆசை வார்த்தைகளுக்கும், அற்பசொற்ப சலுகைகளுக்கும் விலைபோகாதபடி நிதானத்துடனும், தெளிந்த சிந்தனையுடனும், கட்டுக்கோப்புடனும் இருப்போமேயானால் எதிர்காலம் மறுமலர்ச்சியாகத் திகழும் என்பதில் நாம் நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றோம். மேலும் நமது சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றினைய பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார் சட்டத்தரணி கா.மாரிமுத்து.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா