குடியை விட்டு படிக்கத் தொடங்க காரணம்: 58 வயதில் மூன்று பட்டங்கள் பெற்ற முத்துக்காளை மனம்திறப்பு

0
63

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் முத்துக்காளை அண்மையில் பி.லிட் பட்டம் பெற்றிருக்கிறார்.ஏற்கனவே இரண்டு பட்டங்களை பெற்றுள்ள அவர் தற்போது தனது 58வது வயதில் மூன்றாவது பட்டத்தை பெற்று அசத்தியுள்ளார்.இது குறித்து முத்துக்காளை கூறும் போது, ”சினிமாவில் சண்டை பயிற்சி பணிக்காக தான் சென்னைக்கு வந்தேன்.

அப்போது வேலைக்கு சென்று கொண்டிருந்ததால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து பள்ளிப் படிப்பை முடித்தேன்.

சினிமாவில் என் முகத்தை காட்ட எனக்கு பத்து வருடங்கள் ஆனது.

ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாகவே இருந்தது.எனக்கு குடிப்பழக்கமும் அதிகமாக இருந்தது.

முத்துக்காளை குடிப்பதால் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டான் என பேச தொடங்கினார்கள்.அந்த சமயம் தான் நான் முதல் டிகிரி முடித்தேன்.

பிறகு தமிழ் படிக்க முடிவெடுத்து எம்.ஏ. தமிழ் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சியானேன்.இதையடுத்து இன்னொரு பட்டப்படிப்பு படிக்கலாம் என விரும்பி பி.லிட் எடுத்து அதில் தேர்ச்சி பெற்றேன்.நான் குடிப்பழக்கத்தை விட்டு 7 வருடம் ஆகிவிட்டது.

முத்துக்காளை குடித்தே வாழ்க்கையை இழப்பான் என சொன்ன பலரும், தற்போது எதையோ நோக்கி ஓடி கொண்டிருக்கிறான் என சொல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here