அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் செனன் தோட்ட பகுதியில் 36 வயது குடும்பஸ்த்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அட்டன் பொலிஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்துகொண்டவா் இரண்டு பிள்ளைகளின் தந்தையான காந்தருபன் என்பவரே இவ்வாறு தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாாின் ஆரம்கட்ட விசாரனைகளில் இருந்து தொியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டரிய படவில்லையென அட்டன் பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.
குறித்த சடலம் சட்டவைத்திய அதிகாாியின் மரண பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்