நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கரணவாய் மஹா வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாஸ்கரன் பட்சிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.