உடலின் சில முக்கிய உறுப்புகள் கோவிட் வைரஸூடன் இயங்கி படிப்படியாக நிறுத்துவதை கண்டறிந்ததாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களும் தொடர்ந்தும் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை பிரித்தானியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடலின் சில முக்கிய உறுப்புகள் கோவிட் வைரஸூடன் இயங்கி படிப்படியாக நிறுத்துவதை கண்டறிந்ததாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல், மூளை மற்றும் சிறுநீரகங்களுக்கு நீண்டகால கோவிட் அச்சுறுத்தலான மூன்று மடங்கு அதிகம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மனிதர்களை தாக்கியுள்ள கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் விபரங்கள் ‘லான்செட் ரெஸ்பிரேட்டரி மெடிசின்’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 259 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி 5 மாதங்களுக்குப் பின்னர், அவர்களின் உடல் உறுப்புகள் எம்ஆர்ஐ ஸ்கேனிங் மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகாதவர்களின் உடல் உறுப்புக்களை விட உடலில் முக்கிய உறுப்புகளில் சில வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன.
நுரையீரலே இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் என ஆய்வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதயம் மற்றும் கல்லீரல் போன்றவை சேதமடையவில்லை என்பதும் கண்காணிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று நோய்க்கு பின்னர் ஏற்படும் நோய்களுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.