ஊவா மாகாண மொனராகலை மாவட்ட கும்புக்கண தோட்ட பொது மக்கள் ஊவா மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவரது நிதி ஒதுக்கீட்டின் கீழ் அத்தோட்ட மக்களின் போக்குவரத்து பிரச்சனையினை நிவர்த்தி செய்து கொடுக்கும் முகமாக நீண்ட காலமாக சீரற்ற நிலையில் காணப்பட்ட பாதையினை புனரமைத்து வைபவ ரீதியாக திறந்து வைத்து, மக்களின் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் மக்களுடன் கலந்துரையாடும் போது, ஊவா மாகாண மொனராகலை மாவட்டதின் பெருந்தோட்ட மக்களை பொறுத்தமட்டில் அவர்கள் பின் தங்கிய நிலையிலேயே தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அம்மக்கள் அன்றாடம் பல்வேறுப்பட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை எனது அமைச்சின் மூலம் முன்னெடுத்து வருகின்றேன். பெருந்தோட்டங்களின் காணப்படும் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டு வருகின்றமையினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அதனை கவனத்திற்கொண்டே இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் தோட்டப்புற பாதைகளை புனர்நிர்மானம் செய்யும் வேலைத்திட்டத்தினை மேற்கொண்டுவருவதாகவும், இது போன்று எதிர்காலத்திலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து எமது பெருந்தோட்டங்களை அபிவிருத்தியடையச் செய்வதாக குறிப்பிட்டார்
.
அமைச்சின் ஊடக பிரிவு
எஸ்.பிரபாகர்