குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் 40 வருட பூர்த்தியினை முன்னிட்டு சாதனையாளர்கள் கௌரவிப்பு.

0
194

அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 40 வருட பூர்த்தியினை முன்னிட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை அவ்வித்தியாலயத்தின் பழைய மாணவர்சங்கம் சாதனைக்குயில்கள் 2024 எனும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்திருந்தனர்.
பாடசாலை அதிபர் வேல்முருகன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் இப்பாடசாலையில் கல்விகற்று எமது நாட்டில்; அரச மற்றும் அரசசார்பற்ற பல்வேறு திணைக்களங்களில் பணிபுரியும் பழையமாணவர்கள் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்கள்,இந்நிகழ்வின் போது பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌவிக்கப்பட்டனர்.

இதன்போது குறித்த பாடசாலையின் கடந்த காலங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்;கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அதிபர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

வாழும்போதே வாழ்த்துவது ஏனையவர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதனை இந்த பழையமாணவர் சங்கம் உணர்த்தியுள்ளதாகவும் இது தற்போது கல்விபயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூக சார்ந்தவர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று இங்கு உரையாற்றிய பலர் தெரிவித்தனர்.

பரீட்சைத் திணைக்களத்தின் புலனாய்வுப்பிரிவு பிரதி ஆணையாளர் விஸ்வநாதன் , பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர் ஜயசூரியன் , செயலாளர் புண்ணியமூரத்தி, தலைவர் சந்திரகுமார் உட்பட அட்டன், நுவரெலியா , கம்பளை உள்ளிட்ட கல்விவலயங்களின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உட்பட முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here