குயில்வத்தை விபத்து; தப்பியோடிய சாரதி அட்டன் பொலிஸ் நிலையத்தில் சரண்!

0
133

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் 27.05.2018 அன்று இரவு 10.00 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன்போது குறித்த வாகனம் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்ததுடன் அதில் பயணித்த சாரதி தலைமறைவாகியிருந்தார். அத்துடன் குறித்த வாகனத்தலிருந்து மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதோடு, வாகனத்தில் மேலும் ஒருவர் பயணித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கித்தனர்.

விபத்து இடம்பெற்றதன் பின்னர் தலைமறைவாகியிருந்த சாரதி 28.05.2018 அன்று காலை அட்டன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமையை தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here