மதுபானம் அருந்தி செலுத்திய வாகனம் 25அடி பள்ளத்தில் குடைசாயந்த கார்.
வண்டி குடியிருப்பு ஒன்றுக்கும் சேதம் வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பி ஓட்டம் .
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் குயில் வத்தை பிரதேசத்தில் கார் வண்டி ஒன்று குடியிருப்பு மீது குடைசாய்ந்து 25அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த விபத்து 27.05.2018.ஞாயிற்றுகிழமை இரவு 09.45மணி அளவில் இந்து விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
ஹட்டன் பகுதியில் இருந்து கொழும்பு பிரதேசத்திற்கு பயணித்த குறித்த கார்வண்டியில் சென்ற சாரதி முதல் ஏனையோர் மது அருந்திவுள்ளதாகவும் விபத்துக்குள்ளான வாகனத்தின் உட்பகுதியில் பியர் மற்றும் மதுபான போத்தல் என்பன பொலிஸாரால் இனங்காணபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதோடு வாகனத்தை செலுத்திய சாரதி மற்றும் பயனித்தோர் தப்பி சென்றுள்ளதாக ஹட்டன் பொலிார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வாகனம் விபத்து ஏற்பட்டமை தொடர்பில் வாகனத்தில் பயணித்தவர்கள் எவரும் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட வில்லையென தெரிவித்த பொலிஸார் வாகன உரிமையாளரையும் வாகனத்தையும்செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்தவர்கள் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனவே விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர்எஸ்.சதீஸ்)