குறைக்கப்பட்டுள்ள ஐந்து வகை உரங்களின் விலை- விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

0
22

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஐந்து வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான உர மானியத் திட்டம் கடந்த வாரம் முதல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறப்பிட்டுள்ளது.

மேலும், தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 200, T 750, U 709, U 834 மற்றும் T 65 ஆகிய ஐந்து வகையான உரங்களின் விலைகளை அரச உர நிறுவனம் குறைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here