குறைந்த கட்டணத்தில் அபுதாபி – கட்டுநாயக்கவிற்கு புதிய விமானம்

0
37

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் அரேபியா, தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட விமானம் நேற்று(8 ) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

158 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் 3L-197 என்ற எயார் அரேபியா விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த விமானம் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 08.00 மணிக்கு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து மீண்டும் இரவு 8.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here