குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி- டிக்கோயாவில் சம்பவம்

0
48

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

டிக்கோயா- படல்கல தோட்டத்தில் நேற்று (04) குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உட்பட 06 ஆண்களும் பெண்ணொருவரும் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயதான சதாசிவம் சிந்தை என்ற வயோதிப பெண், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வௌ்ளிக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

குளவி கொட்டுக்கு உள்ளான ஏனைய 06 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here