திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 ஆம் ஆண்டில் பயிலும் 16 வயதான மாணவியே இவ்வாறு குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டின் குளியலறையில் குழந்தை அழும் சத்தத்தை கேட்டுள்ள மாணவியின் தாய், கதவை திறந்து பார்த்த போது தனது மகள் குழந்தையை பெற்றெடுத்திருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து தாய், மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக நேற்று திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
காதல் தொடர்பு அல்லது வன்புணர்வு காரணமாக மாணவி கர்ப்பமடைந்தாரா என்பதை கண்டறிய திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.