குளியாப்பிட்டிய இளைஞன் கொலையில் வெளிவராத கதை

0
88

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாப்பிட்டிய இலுக்கென பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் காதலி என கூறப்படும் யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நேற்று (12) குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு அழைக்கப்பட்டதன் பின்னர், கொலைக்கு உதவுதல் மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வஸ்ஸாவுல்லே, இலுக்கேன பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர்.

காதலியின் தந்தைக்கு கிடைத்த அழைப்பின் பிரகாரம், கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி காலை வஸ்ஸாவுல்லே, குளியாப்பிட்டியவில் உள்ள தனது காதலியின் வீட்டுக்குச் சென்ற 31 வயதுடைய சுசித் ஜயவன்ச, காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மாதம்பே பனிரெண்டாவ காப்புக்காட்டில் 7ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் காதலியின் உறவினர் வீட்டில் அவர் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இந்த யுவதி நேற்று தனது உறவினர் ஒருவருடன் குளியாப்பிட்டிய பொலிஸ் தலைமையகத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபர் தெரிவிக்கையில்; 15 வயதாக பாடசாலை மாணவியாக இருக்கும் போதே, கத்தியைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்து, வீட்டின் மேல் மாடிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, முதன்முறையாக பலாத்காரம் செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்பிறகு, தான் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கொலை செய்யப்படலாம் என்ற பயத்தில் பெற்றோரிடம் கூறவில்லை என்றும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

சில வருடங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பலாத்காரம் செய்தார். அதன் பின்னர், தற்போது 18 வயதான சந்தேகநபர், தான் பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொலிஸில் தெரிவித்துள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து, 05 வகையான மருந்து மாத்திரைகளை கொடுத்து, எப்படி சாப்பிட வேண்டும் என்று கூறியதாகவும், அதன்படி தான் அந்த மாத்திரைகளை சாப்பிட்டு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட சுசித் ஜயவன்ச, மற்றுமொரு யுவதியுடன் காதல் தொடர்பு வைத்திருந்தார், அவரும் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், அவர் கர்ப்பத்தை கலைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறு கொல்லப்பட்ட சுசித் ஜயவன்ச, முன்னர் திருமணமாகி மனைவியைப் பிரிந்தவர்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here