குழந்தைகளிடையே ஆஸ்மா அதிகரிப்பு , பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

0
76

குழந்தைகள் மத்தியில் ஆஸ்மா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,

நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.“பாடசாலைகள் விளையாட்டுக் கூட்டங்களுக்குத் தயாராகும்போது, ​​​​சுட்டெரிக்கும் வானிலைக்கு மத்தியில் குழந்தைகள் பல வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவர்கள் ஆஸ்மா தூண்டுதலால் பாதிக்கப்படுகின்றனர்,” என வைத்தியர் எச்சரித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புகைபிடிக்கும் பகுதிகளிலிருந்து குழந்தைகளை விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வைத்தியர் வலியுறுத்தியதுடன், புகைப்பிடிப்பது சுவாச சிக்கல்களை, குறிப்பாக ஆஸ்மா உள்ளவர்களுக்கு அதிகரிக்கிறது என்றார்.

“குழந்தை பருவ ஆஸ்மாவின் பொதுவான அறிகுறிகளில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொடர்ந்து இருமல் ஆகியவை அடங்கும்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here