குழந்தைகளிடையே இந்த அறிகுறிகள் இருந்தால் முகமூடி அணியவும்! வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

0
33

தற்போது நாடளாவிய ரீதியில் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக மேல் சுவாசக் குழாயை அடிப்படையாக கொண்ட வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த நிலை மேலும் தீவிரமடையலாம் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் முகமூடியை அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், இது குழந்தை பருவ ஆஸ்துமா காரணமாக இருக்கலாம்.

இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இப்போதும் கூட, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதுபோன்ற வைரஸ் காய்ச்சலின் பல திரிபுகள் உள்ளன.

வைரஸ் காய்ச்சல் குறிப்பாக மேல் சுவாசக் குழாயில் அதிகமாக உள்ளது. அந்த நிலை மேலும் உருவாகலாம்.

எனவே, அந்த குழந்தைகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். அறிகுறிகள் இருந்தால் முகமூடி அணியச் செய்யுங்கள். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here