குழந்தையின் பாலினத்தை அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

0
32

குழந்தையின் பாலினத்தை கண்டறிய கர்ப்பிணியான மனைவியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,உத்தரபிரதேச மாநிலத்தில் படவுனில் வசித்து கணவன் மனைவிக்கு 5 பெண் குழந்தைகள் இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று அனிதாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.

அதோடு மனைவியின் பெற்றோரிடம், உங்களது மகளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஆண் குழந்தைக்கு தந்தையாகி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று தனக்கு தெரிந்தாக வேண்டுமென்று கணவன் சண்டையிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று வயிற்றைக் கிழித்து பார்த்து தெரிந்துகொள்வதாக கூறி மனைவியின் வயிற்றில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

கணவனின் இந்த கொடூர செயலில் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கணவன் மீது மனைவியின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here