குழந்தையொன்றை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் பரவிய நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் படி, குழந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் குழந்தையின் இரு பாட்டிகளும், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாயும் மற்றொரு பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 42 மற்றும் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சந்தேகநபர்களை நேற்றையதினம் (17) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதோடு குழந்தையை மாவனல்லை சட்ட வைத்தியர் முன்னிலையில் தந்தையின் பாதுகாப்பில் முற்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.