குழம்பில் உப்பு அதிகமாகி விட்டதா?

0
74

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, உப்பு அதிகமானால் உணவை வாயில் வைக்க முடியாது. சுவையை அதிகரிக்கும் உப்பை சில நேரம் நாம் அதிகமாக போட்டுவிடுவோம்.

இந்த நேரத்தில் என்ன செய்தால் அதிகரித்த உப்பின் சுவையை குறைக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.உப்பு அதிகமான உணவில் தயிர் சேர்த்தால் அதனை சுவையை சற்று குறைக்க முடியும். தயிரில் உள்ள கிரீமி டேன்ஜினஸ் உப்புத்தன்மையை கட்டுப்படுத்தவும், நீர்த்துப்போகவும் உதவும்.

சூப், குழம்பு வகைகளில் உப்பு சற்று அதிகமானால் கூடுதலாக சற்று தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சேர்ப்பதால் உப்பின் சுவை சற்று குறையும்.

உப்பு அதிகமான உணவு பொருட்களில் எலுமிச்சை சாறு சேர்த்தால் உப்பு சுவை குறையும். எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உப்பு சுவையை நடுநிலையாக்கும் என்பதால் தாராளமாக சேர்க்கலாம்.

வேகவைத்த சாதம் சிறிதளவு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து சேர்த்தால் உப்பின் சுவை கட்டுப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here