டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்டத்தில் குழவி கொட்டுக்கு இலக்காகி 06 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 06பெண் தொழிலாளர்கள் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 05.07.2018.வியாழகிழமை பிற்பகல் 02.30மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில. அனுமதிக்கபட்டுள்ளனர்.
தேயிலைமலையில் அடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த குளிவி கூடு பெண் தொழிலாளி ஒருவரின் கால் பகுதிபட்டமையின் காரணத்தினாலே கலைந்த வந்து தாக்கியதாக தெரிவிக்கபடுகிறது.
காயங்களுக்கு உள்ளான ஆறுபெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)