குழுத்தலைவர் தெரிவில் தனிச்சையாக முடிவெடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி விலகும் -சிவனேசன் தெரிவிப்பு

0
114

குழுத்தலைவர் தெரிவில் எடுத்திருக்கும் தன்னிச்சையான முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது முறையற்ற வகையில் இடம்பெற்ற குழுத்தலைவர் தெரிவை மீள் பரிசீலனையை செய்யாதுவிடத்து ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் விலக போவதாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருமாகிய பா.சிவனேசன் தெரிவித்தார்நோர்வூட் பிரதேச சபையின் ஜூலை மாத சபையமர்வில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஜனனி ஜானகிவிஜேரத்தன சபை தலைவரிடம் குழுதலைவருக்கான கடிதத்தை சமர்பித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

சபைத்தலைவர் கே.கே.ரவி தலைமையில் புளியாவத்தை கலாசார மண்டபத்தில் 13.07.2018 காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட எட்டு உறுப்பினர்கள் நோர்வூட் பிரதேச சபையில் உறுப்பினர்களாக தெரிவாகியிருக்கின்றோம். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 7 உறுப்பினர்களுமாக 8 பேர் எதிரணியாக இயங்குகின்றோம்.

இந் நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர்களுடன் கலந்துரையாடாது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போனஸ் ஆசனத்தில் வந்த உறுப்பினர் ஜனனி ஜானகி விஜேரத்தன குழுவின் தலைவராக செயற்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரிவசம் அவர்கள் கையொப்பமிட்ட கடிதத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்கு வெற்றிபெற்று வந்த உறுப்பினர்கள் இருக்கும் போது போனஸ் ஆசனத்தில் வந்த ஒருவருக்கு குழுத்தலைவர் பதவி வழங்குவதை ஏற்க முடியாது இக்கடிதம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் அவ்வாறு தன்னிச்சையான முடிவை எடுப்பார்களாயின் நோர்வூட் பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டனி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலக போவதாக எச்சரித்தார்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here