நாடாளுமன்றில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியுற்றது.
பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு 28 பேர் மன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிலையில் நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்க் கட்சியினர் கூச்சலிட்டதால் சபை நடவடிக்கைகளை பத்து நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. யின் ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த பிரேரணைத் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது.