கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு!

0
176

மஹிந்த ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நோக்கிய பாத யாத்திரை கேகாலை நகரை தாண்டும் போது ஒரு வழிப்பாதையை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என கேகாலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை பொலிஸார் சற்று முன்னர் உத்துவான்கந்தையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவிடம் கையளித்தனர்.

பாதயாத்திரை கேகாலை நகருக்கு வருவதை தடுக்க தடை உத்தரவு கோரி பொலிஸார் நீதிமன்றம் சென்ற போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாதயாத்திரையை மனித உயிர்களுக்கோ, சூழலுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படாதவாறு அமைத்துக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here