நாவலபிட்டி கெட்டபுலா உச்சிமலை (பார்கேபல்) கீழ் பிரிவு முத்தமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரண்டாம் வருட சங்காபிசேகமும் பால்குட பவனியும் இன்று (14) திகதி மிக சிறப்பான நடைபெற்றது.
விநாயகர் வழிபாடு அக்கினி பூஜை,திரவ்விய ஹோமம்,ஆகியன இடம்பெற்று அதனை தொடர்ந்து தோட்டதில் உள்ள விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி மேளதாள இசை முழங்க அரகோரா கோசத்துடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அம்பாளுக்கு பாலாபிசேகம் நடைபெற்று அலங்கார அபிசேகம் இடம்பெற்று அம்பாள் வெளி வீதி உள் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாள்.
அதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜையுடன் விழா நிறைவு பெற்றதுடன வருகை தந்த பக்த அடியார்களுக்கு விபூதி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஆலய பரிபாலன சபையினரால் ஆலயத்திற்கு நன்கொடை வழங்கி நபர்கள் மற்றும் ஆலய பணிக்காக உதவி புரிந்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வசந்த சர்மா தலைமையில் புஸ்ஸல்லாவ கதிர்வேலாயுத சுமாமி ஆலய சிவஸ்ரீ வித்யாரூபன் சர்மா அவர்களினால் பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டன.
மலைவாஞ்ஞன்