கெனியன் ஆற்றில் மூழ்கி பலியான மாணவனின் சடலம் மீட்பு!!

0
153

கெனியன் ஆற்றில் மூழ்கி பலியான மாணவனின் சடலம் மீட்பு

கெனியன் மின்சாரசபைக்கு நீர் வழங்கும் ஆற்றுப்பகுதியில் மீன் பிடிக்கும் போது தவறி வீழ்ந்த சிறுவனின் சடலம் சுழியோடிகளின் உதவியுடன் 21.03.2018 காலை 10.30, மணியளவில் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 7 கல்வி பயிலுல் 13 விஜயகுமார் கலைரமன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

அப்புகஸ்தனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் தந்தையும் மகனும் அதிபாதுகாப்பு வலய பகுதியில் 20.03.2018 மாலை 4 மணியளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது நீரில் தவறி வீழ்ந்து சுழியில் சிக்குண்ட நிலையில் மகனை காப்பாற்ற தந்தை நீர் குதித்து கூச்சலிட்டுள்ள நிலையில் வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர்களினால் தந்தையை மட்டும் காப்பாற்ற முடிந்ததாக பலியான சிறுவனின் தந்தையால் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

DSC00229 DSC00236 DSC00256 DSC00259

சம்பவயிடத்திற்கு சென்ற மஸ்கெலிய பொலிஸார் நீரில் முழ்கிய சிறுவனை மீட்க கடற்படை சுழியோடியின் உதவியை நாடிய நிலையில் சடலம் 21.03.2018 காலை மீட்கப்பட்டது.

DSC04999 DSC05002

மீட்கப்பட்ட சடலத்தை அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டபின் மரண பரிசோதணைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மு.இராமச்சந்திரன், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here