எதிர்வரும் வரும் திங்கள்கிழமைக்கு முன்பு உரிய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்யாவிட்டால் கெர்க்கஸ்வோல்ட் தோட்ட உத்தியோகத்தர்களின் பணிபகிஷ்கரிப்பு தொடரும். என்கிறார் இலங்கை தோட்டசேவையாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தேவராஜ்.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேற்பிரிவு தோட்ட வெளிகள உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபரை எதிர் வரும் திங்கள் கிழமைக்கு முன்பு நோர்வூட் பொலிஸார் கைது செய்யாவிட்டால் மீண்டும் செவ்வாய் கிழமையில் இருந்து பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் மீண்டும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என இலங்கை தோட்டசேவையாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தேவராஜ் குறிப்பிட்டார்.
16.02.2018.வெள்ளிகிழமை இடம் பெற்ற பணிபகஷ்கரிப்பின் பின் இலங்கை தோட்டசேவையாளர் சங்கத்திற்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட உத்தியோகத்தர்களுக்குமிடையில் இடம் பெற்ற பேச்சிவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டபட்டதாக தெரிவிக்கபட்டது.
மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கீழ் பணிபரிக்கின்ற நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள உதவி வெளிகள உத்தியோகத்தர் ஒருவரை தொழிலாளர் ஒருவர் தடியினால் தாக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சம்பவம் தொடர்பில் 15.02.2018.வியாழக்கிழமையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதே வேலை வேலை இன்றைய தினமும் காலை 08மணி முதல் 10மணி வரை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் எங்களுடைய பணிபகிஷ்கரிப்பபை கைவிட்டு பணிக்கு திரும்புவதாகவும் எதிர் வரும் திங்கள் கிழமைக்கு முன்பு சந்தேக நபர் கைது செய்யாவிட்டால் எதிர் வரும் செவ்வாய்கிழமை மீண்டும் பணிபகிஷ்கரிப்பு தொடருமெனவும் கெர்க்கஸ்வோல்ட் உத்தியோகத்தர்க்ள தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிடார் .
இலங்கை தோட்டசேவையாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தேவராஜ் இதுபற்றிய கருத்து தெரிவிக்கையில்………….
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்