கெஹலியவுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை

0
18

கெஹலியவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல செய்த மோசடி கொலைக்கு சமமானது எனவும் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல, குறித்த வழக்கின் முன்னாள் சட்டத்தரணியின் வீட்டிற்கு சென்று அவரை காப்பாற்றுமாறு கதறி அழுததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.இந்த மோசடி வெளிவரவில்லை என்றால் இன்னும் எத்தனை நூறு கோடி மோசடி நடந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இத்தனை நாட்களாக விசாரணைகளை பாதிக்காமல் அமைச்சரை தண்டிக்க ஜனாதிபதி அனுமதித்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.மேலும், உயர் பதவியில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுக்காவிட்டால், ஊழல்வாதிகளை தண்டிக்கும் அளவுக்கு தற்போதுள்ள சட்ட அமைப்பு சிறப்பாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

Truth with Chamuditha எனும் இணைய சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here