தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தலைவர்களுல் ஒருவராக கருதப்பட்ட கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேபியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்படி, இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.