வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்து நடத்திய பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிமடை பொலிஸார் குறித்த கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, 5 மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகளை பொலிஸார் கைது செய்தனர்.விசாரணையில், தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கைவிடப்பட்ட கட்டடத்தில் கூடி மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பூட்டை உடைத்து கட்டிடத்துக்குள் நுழைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.