கொடுப்பனவு உயர்வு உதவி ஆசிரியர்கள் ராதாவுக்கு பாராட்டு!

0
140

மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரியர் பயிற்சி பயிலுனர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னனுக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்

ஆசிரியர் உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கு 6 ஆயிரம் ருபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடமையாற்றிய ஆசிரியர் உதவியாளர்கள் எதிர் நோக்கும் பொருளாதார பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன் எதிர்வரும் மே மாதம் முதல் 4 ஆயிரம் ருபா அதிகரிப்போடு வாழ்க்கை செலவு கொடுபனவாக 10 ஆயிரம் ருபாவை வழங்க கல்வி இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரியவருகின்றது

இந் நிலையில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பெருளாதார நெருக்கடி நிலையை உனர்ந்து செயற்பட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்னன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here