கொட்டகலையிலும் மாணவர்கள் டெங்கு ஒழிப்பில் மும்முரம்!

0
136

கல்வியமைச்சினூடாக பாடசாலைகளில் மூன்று நாள் வேலைத்திட்டமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்தினூடாக டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்தான இடங்கள் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டு பாடசாலை சூழல் சுத்தமாக்கப்பட்டது.

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டுக்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வேலைத்திட்டம் வலய சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்ட ஆணையாளர் கே.சிவானந்தன் பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபசிங்க சுற்றாடல் வேலைத்திட்டத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சுமணதாச ஆகியோரின் மேற்பார்வையுடன் பாடசாலைகளில் இடம்பெற்றது.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் சென்கிளயார் தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் அவர்களின் மேற்பார்வையுடன் சிரமதான பணி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கொட்டகலை நிருபர் தி.தவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here