கொட்டகலை பிரதேச கல்வி சமூகம் இன்று 06.05.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் கொட்டகலை நகர் மத்தியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்ககப்பட்டுள்ளன.
அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக மாணவர்களுக்கு பாடசலைக்கு சமூகமளிப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
சோப்பு வகைகளின் விலை ஏற்றம் காரணமாக பாடசாலை சீருடைகளை தினமும் கழுவி சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் அழுக்கான உடையுடன் பாடசாலைக்கு வருகை தரும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளதுடன் புதிய சீருடைகளை கொள்வனவு செய்வதற்கும் முடியாத நிலைக் காரணமாக மாணவர்கள் உட்பட மலையகத்தின் கல்வி சமூகம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நாட்டினை ஆட்சி செய்ய முடியாத இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற இவர்கள் கோஷம் எழுப்பினர்.
க.கிஷாந்தன்