பத்தனை போகாவத்தையில் இருந்து முல்லேரியா பிரதேசத்திற்கு 9700லீற்றர் பால் ஏற்றி சென்ற பவுசர் விபத்து.
போக்குவரத்திற்கு பாதிப்பு.
திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட போகாவத்தையில் உள்ள பால்சேகரிப்பு நிலையத்தில் இருந்து முல்லேறிய பகுதிக்கு 9700லீற்றர் பால் ஏற்றி சென்ற பாரிய பவுசர் ஒன்று 15.02.2018. வியாழக்கிழமை இரவு 07.30 மணி அளவில் கொட்டகலை ஸ்டொனிக்கிழிப் சோட்கட் வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் காரணமாக நேற்று இரவு நேரத்தில் குறித்த வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
கொட்டகலையில் இருந்து ஸ்டொனிக்கிளிப் வீதி ஒரு சிறிய வீதி என்ற அடிப்படையில் எந்த ஒரு பாரிய வாகனங்களும் செல்ல முடியாது. இருந்தாலும் குறித்த பவுசரின் சாரதி அறியாமை காரணமாகவே இந்த வீதியில் பயணித்ததன் காரணமாவே இந்த விபத்த ஏற்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்தள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)