மலையகத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் நேற்று முன்தினம் 7 ஆம் திகதி கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் , மேபீல்ட் ஜாமஸ் ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்; வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.இந்த நிலையில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் , கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் , மேபீல்ட் அமைப்பாளர் ஜெஸ்டின் ஆகியோர் குறிப்பிட்ட தோட்டங்களுக்கு விஜயம் செய்தனர். இதன் போது கிறிஸ்டல்பார்ம் , மேபீல்ட் தோட்ட ஆறுகளை மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியைப் பெற்று அகலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் மேபீல்ட் ஜார்மல்ஸ் தோட்டத்துக்குத் தனிவீட்டுத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பிலும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)