கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி விபத்து – ஐவர் படுகாயம்!

0
110

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

19.03.2018 அன்று காலை 10 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன்பிரிட்ஜ் பகுதியிலிருந்து பத்தனை பகுதிக்கு சென்ற குறித்த லொறி தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரிய வளைவு காரணமாக லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

DSC04043 DSC04045 DSC04050 DSC04052 DSC04056

லொறியில் ஏழு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் மூன்று பெண்களும், ஒரு குழந்தையும், ஒரு ஆணும் அடங்களாக ஐவர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here