குணசீலன் சுஜானி ஒன்பது அதிவிசேட திறமைச் சித்தி!
இன்று வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலத்தின் கல்வி பயிலும் மாணவி குணசீலன் சுஜானி 9A சித்திகளைப்பெற்று தான் பயின்ற பாடசாலைக்கும் தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறிப்பிட்ட மாணவி கொட்டகலை டிறைட்டன் கே.ஓ பகுதியை சார்ந்தவர் ஆவார்.இவரைப்போன்று தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்களும் சிறப்பான பெறுபேறுகளை இம்முறை பெற்றிருப்பது மலையகத்தின் வளர்ச்சியை பறைசாற்றுகின்றது.
மாணவி சுஜானிக்கும் மாணவியை ஊக்குவித்த ஆசிரிய, பெற்றோருக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.
ஷான் சதீஸ்