கொட்டகலை நகர நுழைவாயிலில் மலர்ச்சாலை அமைக்க இடமளியேன்; என்கிறார் சோ.ஸ்ரீதரன்!

0
106

கொட்டகலை நகர நுழை வாயில் பகுதியில் மலர்ச்சாலை ஒன்றை அமைப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
கொட்டகலை வூட்டன் பசாரின் நுழை வாயில் பகுதியில் குடியிருப்பாளர்கள் வாழும் பகுதியில் வர்த்தகர் ஒருவர் மலர்ச்சாலை ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கொட்டகலை பிரதேச மக்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நான் நுவரெலியா பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக பேசிய போது மலர்ச்சாலை அமைப்பதற்கான அனுமதியைப் பிரதேச சபையிடம் பெறவேண்டும். எனவே இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் மலர்ச்சாலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதைத் தடுக்க முடியும் என்றார். இதற்கேற்ப கொட்டகலை நகர நுழை வாயிலில் மலர்ச்சாலை ஒன்றை ஏற்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளேன்.
நோட்டன் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here