கொட்டகலை பிரதேசசபைகுட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் வாதிகளின் பெயர்பலகைகளை அகற்ற நடவடிக்கை!!

0
114

கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள காட்சிபடுத்தபட்டிருந்த தொழிற்சங்க அரசியல்வாதிகளி பெயர்பலகைகைளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கொட்டகலை பிரதேச்சபையின் தலைவரால் 16.05.2018. புதன்கிழமை தீர்மானம் ஒன்று முன்னெடுக்கபட்டது .

கொட்டகலை பகுதியில் அரசியல் வாதிகளின் விருப்பத்திற்கேற்ப பெயர்பலகைகள் காட்சிபடுத்தபட்டுள்ளதாகவும் இந்த காட்சி பலகைகள் பாரிய அளவில் காணபடுவதோடு குறித்த பகுதிகளில் அழகு பொறுந்தாமல் காணடுவதாகவும் குறித்த அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருகின்றமையால் குறித்த பிரதேசத்திற்கு இது போன்ற காட்சி பெயர்பலகைகள் பொறுத்தமில்லையெனவும் கொட்டகலை பிரதேச்சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் மேலும் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் உள்ள அரசியல் வாதிகள் பிரதேச்சபையின் ஊடாக அனுமதி பெற்று அதற்கான பொறுத்தமான பகுதியில் மாத்திரம் இந்த பெயர்பலகைகளை காட்சிபடுத்த முடியுமெனவும் மலையக அரசியல் வாதிகளுக்கு விரும்பப்பட்ட பிரதேசங்களில் பெயர்பலகை காட்சிபடுத்த தடைவிதிக்கபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இது குறித்து இன்றைய தினம் கொட்டகலை பிரதேசசபையின் செயலாளருக்கு இந்த பணிபுரை விடுக்கபட்டமைக்கு எதிராக அனைத்து காட்சிபடுத்தபட்ட பெயர் பலகைகளும் அகற்றபட்டதாக தெரிவித்தார்.

kotagala (4) kotagala (6)

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here