நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் 25.04.2018. புதன் கிழமை காலை முதல் 07 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நுவரெலியா பொதுசுகாதார காரியாலயத்தின் கீழ் பணிபுரியும் ஆறு தாதியர்கள் மாத்திரம் பணிபுரிந்து வருகின்றனர். அந்தவகையில் ஐந்து வருடங்கள் புணிபுரிந்து வருகின்ற பெண் தாதியர்களுக்கு இடம் மாற்றம் வழங்கக்கோறி தகவல் கிடைத்தமையினாலும் இந்த இடமாற்றத்தை வழங்க நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு எதிராக இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கபடுவதாக தாதியர்கள் தெரிவிக்கின்றனர் .
குறித்த தாதியர்களுக்கு இந்த இடமாற்றம் தொடர்பில் இன்று காலை வேலையிலே தமக்கு அறிவிக்கபட்டதாகவும் தமது பணிபகிஷ்கரிப்பினால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் எங்களுடைய பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதேவேலை இந்த விடயம் குறித்து வைத்திய அதிகாரி சாவித்திரி சர்மா அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது கொட்டகலை வைத்தியசாலைக்கு மொத்தம் 12தாதியர்கள் தேவைபடுகின்றனர்.
ஆனால் குறித்த வைத்தியசாலைக்கு மொத்தம் ஆறு தாதியர்கள் மாத்திரம் இருக்கின்றனர் இந்த தாதியர்களுக்கான இடமாற்றம் தொடர்பான கடிதம் என்னிடம் தான் இருக்கிறது அதனை அவர்களிடம் நான் அதை கொடுக்கவில்லை.
உங்களுக்கான இடமாற்றம் வந்திருக்கிறது தாங்கள் செல்லுங்கள் என அறிவித்தேன் அதன் பிறகுதான் இவர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேலை வைத்தியசாலையின் நடவடிக்கைகள் அனைத்து வழமைபோல செயல்படுவதாகவும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)