கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியது சுயேட்சைக்குழு

0
113

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவொன்று இன்று கட்டுப்பணம் செலுத்தியது.

சமூக செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் தலைமையிலான குழுவினரே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தினர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏனைய சபைகளிலும் தமது அணி சுயேச்சையாக களமிறங்கும் எனவும், அதற்கான கட்டுப்பணம் ஒரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும் எனவும் ராமன் செந்தூரன் கூறினார்.

” மலையக அரசியல் வாதிகள், எமது மக்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றிவருகின்றனர். இளைஞர்களையும் சந்தர்ப்பத்துக்காக பயன்படுத்திவருகின்றனர். எனவே, இந்நிலைமை மாற வேண்டும். நாம் மாற்றியமைப்போம். சமூக மாற்றத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பிக்கவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம். மக்கள் எமக்கு ஆசிவழங்குவார்கள்.” – எனவும் செந்தூரன் குறிப்பிட்டார்.

க.கிஷாந்தன், சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here