கொட்டகலை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட தோட்டப்புறங்களின் வைத்திய நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

0
73

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் தலைமையின் கீழ், கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் திரு. விக்ரமசிங்க, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் சுதர்ஷன், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் திரு தசநாயக்க, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட கூட்டம் கொட்டகலை பிரதேச சபையில் நடைபெற்றது.

இதன்போது, கொட்டகலை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட தோட்டப்புறங்களின் வைத்திய நிலையங்களை புனரமைத்தல், அவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளல், போசணைக் குறைபாடுடைய பிள்ளைகளுக்கான புரத உணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here