கொட்டகலை வைத்திசாலையில் வைத்தியர்களும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

0
118

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்   ஈடுப்பட்டுள்ளனர்.

இ.தொ.கா.ஆதரவாளர் ஒருவர் கைது ஏனையோரை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீச்சி.

திம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் 17.03.2018. சனிகிழமை காலை முதல்  பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் .

16.03.2018. வெள்ளிகிழமை இரவு இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்களான மலர்வாசகம் உட்பட ஏனைய ஆதரவாளர்கள் கொட்டகலை வைத்தியசாலையின் வைத்திர்களை தகாத வார்த்தையில் பேசியதாகவும் அவர்களை தாக்க முயற்சிதுள்ளதாகவும் கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

03 06

16.03.2018. வெள்ளிகிழமை இரவு கொட்டகலையில் இருந்து திம்புள்ள பகுதிக்கு நோக்கி பயணித்த வேன் ஒன்றில் நபர் ஒருவர் மோதியசம்பவம் தொடர்பில் காயமடைந்த நபர் கொட்டகலை வைத்தியசாலையில் இருந்து கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டு மேலதிக சிகிச்சைக்காக குறித்த நபர் கணடி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதேவேலை கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சேவைக்கு இடையூரு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தையில் பேசியதகவும், அவர்களை தாக்க முயற்சித்த குற்றச்சாட்டுக்கமைய இ. தொ.கா.வின் ஆதரவாளர்கள் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதோடு ஏனைய ஆதரவாளர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here